பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முதலாழ்வார் மூவர் 41 பிரதிபேதமுள்ளன. இதனால், அப்பெயர்கள் நாயன் மார் அறுபத்துமூவருள் ஒருவரான காரைக்காலம்மை யாரையே குறிப்பன என்ப துந் தெளிவாகின்றது. இனிப் பேராசிரியர் நச்சினார்க்கினியர் முதலிய " உரைகாரர்கள், விருந்து என்ற நூற்பகுப்புக்குபொய்கையார் முதலாயினார் செய்த அந்தாதிச் செய்யுள்களை உதாரணங்களாகக் காட்டுகின்றனர்." “பொய்கையார் முதலாயினார் அந்தாதிகள்' என்பதனால், பூதத்தார்பேயார் திருவந்தாதிகளும் தழுவப்பட்ட செய்தி விளங்கும். ஆதலால் முதலாழ்வார்களின் அருளிச்செயல்களையே அவ்வுரைகாரர் குறிப்பிடுதல் தெளிவாம். நச்சினார்க்கினியர் யோகிகளாய் உபாயங்களால் முக்காலமும் உணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன்றே எத்து அனைநிலைவகையோராவர். அவர்க்கு மாணாக்கராகித் தவஞ் செய்வோர் தாபதபக்கத்தராவர்' என்று, பழைய செய்தியொன்று வழங்குதலை அறிந் தெழுதுவர். இவற்றால், பொய்கையார் முதலிய திருமாலடியார் களும், திருமூலர் காரைக்காற்பேயார் முதலிய சிவனடி யார்களும் சமயவழியாகப் பிரபலம் பெற்றதற்கு முன்பே, பரம்பரையாகவந்த தமிழ்நாட்டு வழக்கு முறையால், ஆக்கவும் கெடுக்கவும் ஆற்றலுடைய தமிழ்ப் பெருமுனிவர்களாகக் கருதப்பட்டும், அவர்கள் திருவாக்குப் பழைய நூலுரைகளில் எடுத்தாளப்பட்டும் வழக்கிலிருந்தன என்பது தெரியலாம், 1. ஐங்குறு நூறு, முன்னுரை பக்கம் 14. 2. தொல்காப்பியம், செய். 239, பேரா. நச், உரை.