பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆழ்வார்கள் காலநிலை 74ம் புறப்பாட்டும், நற்றிணை 18-ம் செய்யுளும் பன்னிரு பாட்டியலிற் சில சூத்திரங்களும் இப்பெரியார் இயற் றியனவாகக் காணப்படுகின்றன." “ ஆழி யிழைப்பப் பகல்போ மிரவரிற் றோழி துணையாத் துயர் தீரும் - வாழி நறுமாலை தாராய் திரையவோஒ வென்னுஞ் செறுமாலை சென்றடையும் போழ்து" 1. இன்னிலை என்ற பெயர்புனைந்த நூலொன்று -45-வெண்பாக்களில் நாற்பாலுடையதாகப் பொய்கையா ராற் பாடப்பட்டதெனவும், அது மதுரையாசிரியர் என்பா ரால் தொகுக்கப்பட்டதெனவும், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அஃதொன்று எனவும், அதனை யியற்றியவர் ஆழ்வாராகிய பொய்கையாரே ஆதல் வேண்டுமெனவும் எழுதிச் சிலவாண்டுகட்குமுன்பு உரையுடன் வெளியிடப் பெற்றுள்ளது. தொல்காப்பியம், யாப்பருங்கலம் என்பவற் றின் பழைய உரைகளிலே, வெவ்வேறு இலக்கணவமைதி கட்கு எடுத்துக்காட்டப்பட்டனவும் புலவர்பலராற் பாடப் 'பெற்றனவுமாகிய வெண்பாக்கள் சில இந்நூலின் இடை பயிடையே கூட்டியுங் குறைத்தும் மாற்றியும் அமைக்கப் பட்டுள்ளன. அவை யொழிந்த ஏனைப்பாடல்கள் யாவும், பழையசான்றோருடைய வெண்பாக்கட்கு இயல்பாயமைந்த *செப்பலோசைத்திறமும், குறித்த பொருளைப் புலப்படுத்தற் குரிய சொன்னயந்தொடைநயங்களும் பொருட்பொலிவும் சிறக்கப்பெறாமலும், ஆயினும் பழைமைதோன்றுமாறு முன்னோராண்ட சொல்வழக்கினும் செய்யுள் வகையினும் ஒரு சில பெய்யப்பெற்றும் உள்ளன. இந்நூல் முழுவதும் பொய்கையார் ஒருவரேசெய்ததாயின், அதனைத் தொகுத் தவர் மதுரையாசிரியர் என்பது பொருந்தவில்லை. புலவர் பலராற் பாடப்பெற்ற செய்யுட்களே பின்னோரால் தொகுக் கப்படுதற்கு உரியவன்றி, தனிநூலாக ஒருவரால் இயற்றப் பட்டதொன்றைத் தொகை நூலாக முன்னோர் யாண்டும்