பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முதலாழ்வார் மூவர் 47 மல்லை என்பது வளமென்ற பொருளில், ஆழ்வார்கள் பாசுரங்களில் அடிக்கடி பயிலுதலுங் காண்க.! இவ்வாறு கடல்வளம் பெற்றிருந்த பண்டைத் துறைமுகப்பட்டினம், முதல் நரசிம்ம பல்லவனால் பின்பு புதுப்பிக்கப்பட்டு மாமல்லன் என்ற அவன் சிறப்புப் பெயரும் வாய்ந்ததனால் மாமல்லபுரம் என்ற புதுப் பெயரும் அதற்குப் பெரு வழக்காயமையலாயிற்று. மகாமல்லனான நரசிம்மபல்லவனால் புதியதாக உண்டாக்கப்பட்டதே இவ்வூரென்றும், அதனால் 'மாமல்லை' என்ற பெயர் வாய்ந்த அவ்வூரைப்பாடிய பூதத்தாழ்வார் அவ்வரசன் காலமாகிய 650-க்குப் பின்பே இருந்தவராதல் வேண்டுமென்றும் கருதினர் சரித்திரவறிஞர் சிலர். இக்கொள்கை உறுதியுடைய தென்று நாம் கொள்வதற்கில்லை. நரசிம்மபல்லவனால் முன்னில்லாதிருந்த ஊரொன்று புதியதாக நிருமிக்கப்பட்டு அவன் பெயர் கொடுக்கப் பெற்றது என்பதற்குச் சாஸன முதலிய ஆதரவு ஒன்றுமேயில்லை. திருக்கடன்மல்லை என்ற மாமல்லபுரத்திலுள்ள ஆதிவராகர் சந்நிதியுள், இப்பல்லவனுக்கும் இவன் தந்தை சிம்மவிஷ்ணுவுக்கும் சிலையுருவங்கள் அமைக்கப் பெற்று அவற்றின்மேலே அவர்கள் பெயர்களும் வரையப்பட்டுள்ளன என்று தெரிகின்றது. 1. மல்லை மாமுந்நீர்' (பெரிய திருமொழி. 4, 3, 6; 8, 6, 4) எனக் காண்க . 2. The History of Sri Vaishnavas, p 16.