பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

48 ஆழ்வார்கள் காலநிலை மாமல்லனான நரசிம்மவர்மனால் தனியே புதியதாக உண்டாக்கப்பட்டதே அந்நகரமாயின், தன் பிம்பத்தை யன்றித் தந்தைபாட்டர்களின் உருவச் சிலைகளையும் அவன் அங்கு அமைக்க வேண்டிய நியாயமில்லை. அதனால், மகாமல்லனாகிய நரசிம்மவன்மனுடைய பாட்டன் காலத்துக்கு முன்பே அப்பட்டினம் விளங்கி யிருந்ததென்பதும், அவ்வூர்க் கோயில்கள் சில அம்மகா மல்லன் முன்னோராற் கட்டப்பெற்று அவர்கள் உருவச் சிலைகளையும் உடையவாயிருந்தன என்பதும் நன்கு. பெறப்படும். சங்க காலத்தும், தொண்டை மண்டலத் தின் சிறந்த தலைநகரமாகக் கடன்மல்லை விளங்கிய தென்பது, சிறுபாணாற்றுப்படையில் இவ்வூர் பெரிதும் சிறப்பிக்கப்படுதலால் அறியப்படும். இதன் விரிவு' திருமங்கை மன்னன் விஷயமாக எழுதுமிடத்து விளக்கப்படும். மல்லை என்றும் அவ்வூர் ஆழ்வார் திருவாக்குக் களில் வழங்குகின்றது. இது, கடல்வளமுடையது என்ற பொருளில் வந்த கடன்மல்லை என்பதன் குறுக்க மாகும். “மாமல்லை கோவல் மதிற்குடந்தை' என்று பூதத்தாழ்வார் அருளிய தொடருள் மல்லை' என்பதற் குக் கொடுக்கப்பட்ட விசேடணம்“நீளோதம், வந்தலைக்கு மாமயிலை மாவல்லிக் கேணியான் என்ற திருமழிசைப்பிரான் வாக்கிற்போல வந்த அடை. சொல்லாகக் கொள்ளற்குரியதன்றி, பிறர்கருத்துப் படி, மாமல்லபுரம் என்பதன் திரிபாகவே கொள்ள வேண்டுமென்னும் நியதியில்லை. ஆகவே, அக்கடன் மல்லைத் திருமாலைப்பாடிய பூதத்தாழ்வாரையும், அவர் காலத்தவர்களான பொய்கை பேயாழ்வார்களையும் 7-ம் நூற்றாண்டுக்கும் பிற்பட்டவர்களாகக் கொள்பவரின்