பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

50 ஆழ்வார்கள் காலநிலை குருபரம்பரைகள் கூறும். வேறுபாட்டினின்று, அம் மூவரும் முற்பட்ட தொகுதியினர் என்பதே முன்னோர் கருதது என்பது தெரியலாம். ஏனை ஆழ்வார்கள் போல, பிற்கால வழக்குப் பெற்ற விருத்தமுதலிய செய்யுள் விகற்பத்தைக் கொள் ளாது, பழைமையாகிய வெண்பா வொன்றானே தம் இயற்பாத் திருவந்தாதிகளை இவர்கள் அருளிச்செய் திருத்தலும், ஏனையர் வாக்கிற்போல பொத்தம் சைநம் முதலிய சமயவாதம்பற்றிய செய்திகளே னும் மதமாற்சரியமேனும் இவர்கள் வாக்கிற் பயிலாமையும் இவர்களது பழைமைக்கு ஏற்ற சான்றாகின்றன, அதனால், இன்னோர் நம்மாழ்வார் முதலியோரினும் இரண்டொரு நூற்றாண்டு முற்பட விளங்கியவர் என்றே கொள்ளற்குரியர். அதனால், பெரும்பாலரான ஆழ்வார்கள் ஒரு காலத்தவராக இருந்தமைபற்றி, இம் முதலாற்வாரையும் அவ்வடியார் தொகுதியிற் சேர்த்துத் திவ்யசூரிசரிதம் கூறலாயிற்றென்றே தோற்றுகிறது. மூன்றாம் அதிகாரம் திருமழிசையாழ்வார் தோற்றம் இவர், தொண்டைநாட்டுள்ள திருமழிசை என்ற தலத்தில், பகவானை ஆராதித்துவந்த பார்க்கவ முனிவர்க்கு அவர் பத்தினியிடம் பிண்டரூபமாக அவதரித்து, அவர்களால் வழியிடை... யே அநாதரவாகக்