பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமழிசையாழ்வார் 51 கைவிடப் பெற்றவர். இப்பிண்டம் சில நாட்களில் உருப்பெற்ற குழந்தை வடிவாகி அழுது சோர்ந்து கிடப் பதைக் கண்ட திருவாளர் என்ற சதுர்த்தரொருவர் இதனை எடுத்து வளர்த்துவர, இதுவும் வளர்ந்து இளமையிலேயே பரஞான முதிர்ச்சிபெற்ற யோகியாக விளங்கியது. இப்பெரியாரது குழந்தைப் பருவத்தில் இவரது மகிமையறிந்து பால்கொடுத்து வந்த பாகவத ரொரு வர்க்கு இவரருளாற் பிறந்த கணிகண்ணர் என்பவர், இவருக்கு இணைபிரியாத் தொண்டராயினார். தவநெறியில் திருமழிசையார், உண்மைத் தத்துவம் இன்ன தென்பதை உணரமுயன்று, சைனம் பௌத்தம் சைவ முதலிய எல்லாச் சமயங்களையும் ஆராய்ச்சி செய்து முடிவில் திருமாலே பரதெய்வமென்று தெளிந்து, அப் பெருமானை இடைவிடாது தியானித்துக் கொண்டு திருவல்லிக்கேணியில் நெடுங்காலம் யோகத்தில் எழுந் தருளியிருந்தார். அப்போது, பரம யோகிகளும் முதியோர்களுமான முதலாழ்வார் மூவரும், திருவல்லிக் கேணிக்கெழுந்தருளித் திருமழிசையாரது பிரபாவ மறிந்து அவரைச் சந்தித்து அளவளாவிப் பிரிந்தனர். இளமை தந்தார் பின்பு, இப்பெரியார் அம்முதலாழ்வார்கள் அவத ரித்த தலங்களைத் தரிசித்துவிட்டுத் திருக்குடந்தைக்குச் செல்லத்தொடங்கி, இடையில் கச்சித் திருவெஃகாவில் எழுந்தருளியிருந்தபோது, ஆங்குத் தமக்கு உரிய கைங்கரியஞ்செய்துவந்த கிழவியொருத்தியைக் குமரி