பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

52 ஆழ்வார்கள் காலநிலை யாக்கியருளினார். இவ்வற்புதச் செய்தியை அறிந்த அந்நகரத்தரசன் தன் கிழத்தனத்தையும் நீக்கிவைக்க ஆழ்வாரைத் தன்னிடம் அழைத்துவரும்படி கணி கண்ணர் மூலம் தெரிவிக்க, ஆழ்வார் அதற்கிணங் காராக, சினங்கொண்ட வேந்தன் அவ்விருவரும் தன்னகரைவிட்டு வெளியேறும்படி கட்டளையிட்டனன், கடவுளையும் அழைததுச் சென்றார் உடனே, திருமழிசையார் திருவெஃகாவில் அறிது யிலமர்ந்த திருமாலையும் தம்முடன் வெளியேறும்படி வேண்டி, அப்பெருமானைப் பரிவாரங்களுட்பட உடன ழைத்துக்கொண்டு கணிகண்ணரோடும் அந்நகரத்தை விட்டு நீங்கினர். இச்செய்தியறிந்த அரசன் ஆழ்வாரது பிரபாவமறிந்து, அவரைப் பெருமாளுடன் திரும்புமாறு பிரார்த்தித்தழைத்து அவர்க்குத் தொண்டுபூண்டனன். பின்பு, திருமழிசையாழ்வார் திருக்குடந்தை என்ற கும்பகோணஞ் சென்று, அங்கே யோகத்தில் நெடுங் காலம் எழுந்தருளியிருந்து, திருச்சந்த விருத்தம், நான் முகன் திருவந்தாதிகளை அருளிச்செய்து பின் பரமபதம் அடைந்தார்--என்பது இவ்வாழ்வாரது சரித்திரச் சுருக்கமாகும். இவ்வரலாற்றினின்றும், முதலாழ்வார் மூவரும் திரு மழிசைப் பிரானுக்கு ஆண்டிலும் அறிவிலும் முதிர்ந்த வர்களென்பதும், அந்நால்வரும் ஒருகாலத்தவர் என்பதும் தெரியலாம். பல்லவரைப் பற்றியது காஞ்சியில் ஆட்சிபுரிந்த அரசன் இன்னானென்று திவ்யசூரிசரிதம் கூறவில்லையேனும், அவன் பல்லவவமி