பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

58 ஆழ்வார்கள் காலநிலை என்ற ஆழ்வார் பாசுரங்களால் மேற்கூறிய செய்தி வெளியாகும். அன்றியும், சைவ வைணவர்க்குள் மாற் சரியங்களும் இவர்காலத்திருந்துவந்தன. " மற்றுத் தொழுவா ரொருவரையும் யானின்மை கற்றைச் சடையான் கரிகண்டாய்" (நான்முகன். 26) " பிதிரு மனமிலேன் பிஞ்ஞகன் றன்னோ டெதிர்வ னவனெனக்கு நேரான்" (ஷை, 84) “ காணினு முருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார் பேணினும் வரந்தர மிடுக்கிலாத தேவரை ஆணமென் றடைந்துவாழு மாதர்காள் (திருச்சந், 69) என்பன போன்ற இவர் பாடற்றொடர்கள், முதலாழ்வார் போக்கிற்கு முற்றும் வேறுபட்டன வென்றேசொல்லத் தக்கன. இவ்வாறு சமய விரோதங்கள் செறிந்து நிகழ்ந்தது குணபரனாகிய மகேந்திரவர்மனது ஆட்சிக்காலமேயாம். இப்பல்லவனே முதலில் சைனசமயத்தவனா யிருந்து, திருநாவுக்கரசுநாயனாரால் சைவமதத்திற்குத் திரும்பப் பெற்றவன் என்பர். இக்குணபரன் சைவப்பற்றுடையனா யினும், ஏனைய வைதிக மதங்களில் வெறுப்புக்காட்டி வந்தவனல்லன். மகேந்திர வாடியில் 1 திருமால்கோயி 1. இவ்வூர், சோழசிம்மபுரததை அடுத்துளது. இதன குடைவரைக் கோயிலிற்கண்ட சாஸனத்தால், மகேந்திர விஷ்ணுகிருகம்' என்பது அவ்வூர்த் திருமால் கோயிலின் பழைய பெயர் என்று தெரியவருகின்றது. (Ep. Rep.13 of 1896).