பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமழிசையாழ்வார் 59: லொன்று இப் பல்லவனாற் கட்டப்பட்டிருப்பதும், மாமல்லபுரத்து ஆதிவராகர் சந்நிதியில் இவனது உருவச்சிலை அமைந்திருப்பதும் வைஷ்ணவசமயத்தும் இவன் வைத்திருந்த அபிமானத்துக்கு உற்ற சான்றுக ளாம். குணபரனது சமயச்சார்பு இத்தகையதாயினும், இவன் மகன் நரசிம்மவர்மனும், இவன் தந்தை சிம்ம விஷ்ணுவும் பரமவைஷ்ணவர்கள். இவர்கள் போன்ற அரசரது ஆதரவுகளாலும், பெரியோர் அவதாரங்க ளாலும் சைவம்போலவே திருமால்சமயமும் நாட்டில் தழைத்திருந்ததென்றே சொல்லத்தகும். திருமழிசைப் பிரானுக்குச் சிறிது முற்பட்டவர்களாக விளங்கிய முத லாழ்வார் காலத்தில் ஆட்சிபுரிந்து வந்த பல்லவவேந்தர் திருமாலடிமைத்திறத்திற் சிறந்திருந்தவரென்பது, “ கோவாகி மாநிலங் காத்துநங் கண்முகப்பே மாவேறிச் செல்கின்ற மன்னவரும்-பூமேவுஞ் செங்கமல நாவியான் சேவடிக்கே யேழ்பிறப்புக் தண்கமல மேய்ந்தார் தமர் என்ற பூதத்தாழ்வார் திருவாக்கால் விளங்கும். மாமல்ல' புரம் என்று பின்பு பெயர்பெற்ற திருக்கடன் மல்லையில் அவதரித்த இவ் வாழ்வாரால் தங்கண்முகப்பே மாவேறிச் செல்கின்ற மன்னவ” ராகக் கூறப்பட்ட. திருமாலடியாரான அரசர், சிம்மவிஷ்ணுவும் அவன் முன்னோரு மாகவே கொள்ளத் தடையில்லை 1 என்க, 1. மகேந்திரவர்மனைச் சைவனாகக் கூறததகுமாயினும், அவன் தந்தை சிம்மவிஷ்ணுவையும், அவன் முன்னோரான பல்லவரிற் பலரையும் பரம பாகவதர்கள் என்று விசேடித்துச் சாஸனங்கள் கூறுகின்ற ன. (Ind. Ant. Vol. V. pp 50, 154:.