பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 ஆழ்வார்கள் காலநிலை இவ்வாறு பல்லவர்களால் அபிமானிக்கப்பெற்று *வளர்ந்த வைணவமும் சைவமும் புறமதத் தவரைத் தாக்குவதில் ஒன்றிய கருத்துடையவாக இருந்திருக்கக் கூடுமேனும், அவ்விருசமயத்தார்க்கும் வேறுவகையில் உள்ளார்ந்த மாற்சரியங்கள் இல்லாமற் போகவில்லை. இதற்கு மேற்காட்டிய திருமழிசையார் வாக்குமட்டுமே சயன்றி “ நூறு கோடி பிரமர்கள் நுந்தினார் ஆறு கோடி நராயண ரங்ஙனே ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர் ஈறி லாதவ னீச னொருவனே', “ தாயினு நல்ல சங்கர னுக்கன்ப ராய வுள்ளத் தமுதருந் தப்பெறார் பேயர் பேய்முலை யுண்டுயிர் போக்கிய மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே" என்பனவும், இலிங்கபுராணம், திருக்குறுந்தொகை போன்ற பதிகங்களில் அமைந்த அப்பர் பாடல்களும், தம் தேவாரப் பதிகங்களின் ஒன்பதாங்கவிதோறும் திருமாலைத் தாழவுரைப்பதையே சங்கற்பமாகக் கொண்ட சம்பந்தர் பாடல்களும் வைஷ்ணவ சமயக் கொள்கை ஒருபுறம் வளர்ச்சிபெற்று வந்ததையும், அதனினும் சைவத்தில் அதிகப்பற்றுத் தமிழ்மக்கட்கு Vol. XV. p, 274) "நம் கண்முகப்பே மாவேறிச் செல்கின்ற மன்னவரும், செங்கமல நாவியான் சேவடிக்கே யேழ் பிறப்பும்... தமா” என்று, தம் காலத்தரசர் பரம்பரையே வைஷ்ணவர்கள் எனப் பூதத்தார் இரண்டாந்திருவந் தாதியில் (69) பாடுதற்கு இயையவே, சாஸனங்களும் அக்காலத்துப் பல்லவரைக் கூறுதல் அறியத்தக்கதாம்.