பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

162 ஆழ்வார்கள் காலநிலை முதலாழ்வார்களுள் முன்னவரே என்று கருதுவதற்குத் தக்க காரணங்களிருத்தல் மேலே விளக்கப்பட்டது, இச்செங்கணான் கடைச்சங்கத்தரசருள்ளேபிற்பட்ட வன் என்பது சங்க நூல்களை ஆராயுமிடத்து நன்கு பெறப்படும். பழைய சோழ சாஸனங்கள் 1. கவிச்சக்கரவர்த்தியாகிய கூத்தர் தம் இராசராசனு லாவில்... சொன்மாலை நல்லவன் பொய்கை களப்பழி நாற்பதுக்கு, வில்லவன் காற்றளையை விட்டகோன்” என்று சிறப்பிக்கின்றார். "சுடராழி யானடிக்கே சூட்டினென் சொன் மாலை" என்று தம் திருவந்தாதியைப் பொய்கை யாழ்வார் தொடங்கு தவின், அதனை உட்கொண்டே கூத்தர் அப்பெரியாரை அவ்வாறு விசேடித்தனர் என்று கொள்ளத் தகும், சொன்மாலை நல்லவன்-பாமாலையாகிய திருவந்தாதி யைப் பாடிய நல்லடியார் என்றவாறு. விக்கிரம சோழனு லாவில், இன்னருளின் மேதக்க பொய்கை என்று அப்புலவரே *பாடிய தொடர்- திருமாலின் பேரருள் பெற்றுச் சிறந்தவர் அப்பெரியார் என்ற கருத்துடன் அமைக்கப்பட்டதாகக் கருதவும் இடமுண்டு. 2. சோழன் செங்கணான், சேரமான் கணைக்கா லிரும் பொறையைப் போரில் வென்று அகப்படுத்தியபோது, சேரனைச் சிறைமீட்டல் வேண்டி அச்சோழன்மேற் களவழி பாடிய பொய்கையாரே, கோக் கோதை மார்பன் என்ற சேரனையும் 48-ம் புறப்பட்டாற் பாடியுள்ளார் இவ்வாறு, இப்புலவர் காலத்தவர்களாகத் தெரியும் கணைக்காலிரும் பொறை, செங்கணான், கோக்கோதை மார்பன் என்ற அரசர் மூவரும் முற்பட்ட சங்கப் புலவரெவராலும் பாடப் பெற்றவர்களாகத் தெரியவாராமையின், அன்னோர், கடைச் சங்கத்துக்குச் சிறிது பிந்திய காலத்தில் வாழ்ந்தவர்களென்று கருதத்தகும். நற்றிணையுள் (18)-மூவன்...எயிறழுத்திய கதவிற் றொண்டி." என்று பொய்கையார் வாக்கிற் கண்ட செய்தி,