பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆய்வு, இலக்கிய வரலாற்றில் - திருப்புமையமாக அமைந்தது. இக்காலத்தில் எம். ஃபில், பிஎச். டி. போன்ற சிறப்புப் பட்டங்களுக்கான ஆய்வு நெறிகள், முறைப் படுத்தப்பட்டுள்ளன. இந்நெறி பற்றிய நூல்களும் வெளி வந்துள்ளன. இந்நிலையில் ஐம்பதாண்டுகளுக்கு முன் ஆய்வு நெறி எவ்வாறு இருந்தது என அறிதற்கு இந் நூல் பெருந்துணை செய்யும். ஒரு பொருளை எடுத்துக் கொள்ளல்; அப்பொருள் பா றிய கருத்துக்களைத் திரட்டல், உண்மை காணுதல்; மாறுபட்ட கருத்துக் களைச் சான்றுகாட்டி மறுத்தல்; தம் கருத்து நிறுவுதல் என்னும் ஆய்வு நெறியே, இவரது நெறி, "கிடைத் துள்ள சாதனங்களையெல்லாம் திரட்டிக் கொண்டு ஒரு சார்புமின்றிச் சரித்திரகாரன் - ஒருவன் செய்யும் ஆராய்ச்சி போன்றதேயன்றி, சம்பிரதாய முறையுள் நின்று கூறுவதன்று” (பக். 30) என இவர் குறித்தலால் இவரின் வரலாற்று நோக்கும் உண்மை . காணும் போக்கும் பெறப்படும். சிறந்த ஆய்வு நூலாகத் திகழும் இது, ஆய்வு நெறி வளர்ந்திருக்கும் இக் காலத்தில் கிடைத்தற்கரிய நூலாகிவிட்டது. இதனை மணிவாசகர் நூலகம் மறு பதிப்பாகக் கொண்டு வந்துள்ளது. ஆசிரியரின் வேண வாவுக் கேற்ப, பின்னர் வந்த கட்டுரைகளையும் இப் பதிப்பில் இணைத்து வெளியிடுவதில் பெருமகிழ்வு அடைகிறோம். இந்நூல் வெளிவரத் துணை நின்ற திருவாளர்கள் மு. சண்முகம்பிள்ளை, பேராசிரியர் பார்த்த -சாரதி இருவருக்கும் எங்கள் நன்றியுரியது. இந்நூல் நூலகத்தின் வளர்ச்சிக்கும் தமிழ் ஆய்வுக்கும் ஏற்றது. நல்ல பயனுள்ள நூல்களை வெளியிடும் மணிவாசர் நூலகத்திற்குத் தொடர்ந்து ஆதரவு தந்து அந்நூலகத் தினை ஊக்கப்படுத்துதல், தமிழ் மக்களின் பொறுப்பு. இது மணிவாசகர் நூலகத்திற்கு என்றும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடையேன், ச. மெய்யப்பன்,