பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமழிசையாழ்வார் “ குலங்களாய வீரிரண்டி லொன்றிலும் பிறந்திலேன் நலங்களாய நற்கலைகள் நாலிலு நவின்றிலேன் புலங்களைந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின் இலங்குபாத மன்றிமற்றொர் பற்றிலேனெம் மீசனே (திருச்சர். 90). எனத் தம் வரலாறு கூறுதல் அறியத்தக்கது. இவர் வளர்ந்த குலத்தின் தாழ்வுபற்றியே, பெரும்புலியூரில் நடந்த யாகமொன்றில் அறியாது தம்மை யிகழ்ந்த அத்வர்யு தொடக்கமான சடங்கவிகள் முன்பு“ அக்கரங்க ளக்கரங்க ளென்று மாவ தென்கொலோ இக்குறும்பை நீக்கியென்னை யீசனாக்க வல்லையேல் சக்கரங்கொள் கையனே சடங்கர்வா யடங்கிட உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே. என்று பாடி, திருமால் தம் திருமேனியிடைத் தோன் றிக் காட்சி தரும்படி செய்வித்துத் தம் பிரபாவத்தை வெளிப்படுத்தினர் என்பது இவ்வாழ்வாரது சரித்திர மாம். இப்பெரியார் அருளிய திருச்சந்த விருத்தத் திற்குப் பழைய தமிழுரை யொன்று உண்டென்பது ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தால் தெரிய வருகின்ற து. 1 இதுவரை கூறிவந்தவற்றால் முதலாழ்வார் மூவரும் திருமழிசை யாழ்வாரும் 5ஆம் - நூற்றாண்டின் பிற் 1. திருச்சந்தவிருத்தம், 181-ம் பாசுரத்தில் உடைந்த வாலி தந்தனக் குதவவந் திராமனாய்” என்ற அடியுள் "(வாலிதந் தனக்கு) மவ்வுக்கு ந ஆதேசமாய் 'தம்பி' என் றத்தை 'தந்' என்று கடைக்குறைத்தலாய்க் கிடக்கிறது என்று ஒரு தமிழன்” எனவரும் வியாக்கியான பந்தி தாண்க.