பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெரியாழ்வார் 73 அருளிய அந்தாதிகள் முற்பட அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் அருளிச் செயல்களெல்லாம், தம் பெயருடன் பயன் கூறும் முத்திரைக்கவிகளைக் கொண்டு மூடிவன வல்ல என்பதும், திருப்பாணாழ்வாரது அமலனாதி பிரான்' ஒழிய ஒழிந்த ஆழ்வார்கள் பிரபந்தங்களெல் லாம் அவைகொண்டு முடிவன என்பதும் அறியத் தக்கன. முதற்றொகுதியினரான திருமாலடியார்களென்று கூறத்தக்க முநலாழ்வார் திருமழிசையார்களுக்குப் பின், நம்மாழ்வார் வரலாறு கூறுதற்குரியதாயினும, அடிப் படையான சரித்திரவுண்மைகள் சிலவற்றை அறிதற்கு, நாலாயிரதிவ்யப்பிரபந்த ஆசிரியர்களுள் முதல்வரான பெரியாழ்வாருடையதும் அவர் திருமகளாருடையது மான வைபவங்கள் சிறந்த சாதனமாயிருத்தலால், அப் பெரியார்களைப் பற்றிய செய்திகளை இனிக் கூறுவேன். 4 ஆம் அதிகாரம் பெரியாழ்வார் இவ்வாழ்வார் தென்பாண்டிநாட்டிலுள்ள ஸ்ரீ வில்லி புத்தூரிலே, அந்தணவருணத்தில் வேயர்குலத்து அவதரித்து, விஷ்ணுசித்தர் என்ற திருநாமம் பெற்று விளங்கியவர். 1. 'வேயர் தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன்' (5,4. 11) வேயர்புகழ் விட்டுசித்தன்' (1, 8, 11) என்ற இவ்வாழ் வார் திருவாக்குக்களால் இவர் குலம் வேயர்குலம்' என்பது