பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

74 ஆழ்வார்கள் காலநிலை திருநந்தவனமுண்டாக்கித் திருமாலைகட்டுதல் முதலிய கைங்கரியங்களைச் செய்து கொண்டு தம் மூர்ப் பெருமானை இடையறாது வழிபட்டு வந்தவர். ஒருகால், மதுரையில் ஸ்ரீவல்லபன் என்ற பாண்டி யன் சமயவிசாரஞ்செய்வதிற் பெரு விருப்புடையனாய்ப் பரமார்த்த தத்துவம் இன்னதென்பதை நிரூபிக்கும் பெரியோர்க்கு உரியது' என்று தன் அரண்மனையிற் கட்டிய பொற்கிழியைத் திருமால் பேரருளால் இவ்வாழ் வார் சமயவாதியர் பலரோடு வாதஞ்செய்து பரத்துவ நிரூபணம் பண்ணி வெற்றியடைந்து பெற்றன ரென்றும், அதுமுதல் பட்டர்பிரான் என்ற சிறப்புப் பெயர் இவர்க்கு வழங்கலாயிற்றென்றும், அப்பாண்டி விளங்கும். 'வேயன் கோவலன் கவுணியன் சேந்தன்' (S.I.I. V. 702) என்ற சாஸனத் தொடராலும், இத்தகைய பார்ப்பனக்குடி பண்டிருந்தமை தெரியலாகும். வேயர் மூங் கிலையுடையவர். திருவரங்கத்தமுதனாரது குடியை மூங்கிற்குடி' என்று, அவரது இராமாநுச நூற்றந்தாதித் தனியன் கூறுவதும், இவ் வேயர்குலத்தோடு ஒத்ததே. 'பிரமசரிய நிலையை நீங்கி இல்லற நிலையடையும் பிராமணன் மூங்கிற்கோலை ஏற்றுக் கொள்க' என்று தர்மசூத்திரங் கூறுவதால், அத்தகைய தண்டைத் தாங்கி வந்த அந்தணரில் ஒருசாரார்க்கு 'வேயர் குலம்' மூங்கிற்குடி' என்ற பெயர்கள் வழங்கியனவாக வேண்டுமென்பர் (The Holy Lives of the Alvars by A. Govindacharya Swami, p. 20). “பிடித்துத் திரியும் வேய்த்தொழிலாளர் மிழலையுள்ளீர் என்ற அப்பர் தேவாரத்தொடரும் (தேவா. சுவாமிதா, பதிப்பு, பக். 586, பாட்டு, 4). 'வெதிரேய்கரத்து... அதிரேய் மறையினிவ் வாறு செல்வீர்' என்ற வாதவூரடிகள் திருக் கோவைத் தொடரும் (243) இங்கு ஒப்பிடத்தக்கன.