பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெரியாழ்வார் 75. யனும் இவர்க்கு அடியனாயினன் என்றும், தாம் வாத வெற்றியிற்பெற்ற கிழிப்பொருளைத் தம்மூர்த் திருமால் கைங்கரியங்களில் விநியோகித்து அப்பெருமானை முன் போல் இடையறாது வழிபட்டுக்கொண்டிருந்தன ரென்றும், இவர் அவதாரகாலம் கலிபிறந்த 57 ஆம் ஆண்டென்றும் குருபரம்பரைகள் கூறுகின்றன. “ பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென் றீண்டிய சங்க மெடுத்தூத --வேண்டிய வேதங்க ளோதி விரைந்து கிழியறுத்தான் பாதங்கள் யாமுடைய பற்று" என்பது இவரது தனியன். மேற்கண்ட இவ்வாழ்வார் வரலாற்றோடு இவர் திருவாக்குக்கள் பெரிதும் ஒத்துள் ளன. தம்மூர்த் திருமால் கோயிலுக்கு எல்லாவகைக் கைங்கரியங்களையும் புரிந்துகொண்டும், அக்கோயிலில் எல்லா மரியாதைகளையும் பெற்றும் பரமபாகவதராக வும் மகாஞானியாகவும் இவ்வாழ்வார் வாழ்ந்தவ ரென்பது-- “ நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும் கையடைக் காயுங் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும் மெய்யிட நல்லதோர் சாந்தமுந் தந்தென்னை வெள்ளுயி ராக்கவல்ல பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே.. (திருப்பல். 8.)