பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெரியாழ்வார் 77 “ தென் கூடற்கோன், தென்னன் கொண்டாடுங் தென்றிரு மாலிருஞ்சோலையே” (ஷ 4, 2, 7). “ பருப்பதத்துக் கயல்பொறித்த பாண்டியர் குலபதிபோல் திருப்பொலிந்த சேவடியென் சென்னியின் மேற்பொறித்தாய்” ( க்ஷ 5, 4, 7). பெரியாழ்வார் அருளிச்செயல்களை நோக்குமிடத்து, திருமாலவதாரங்களுள்ளே சிறப்பாகக் கண்ணபிரானது. தோற்றமுதல் நிகழ்ந்த பாலசரிதைகளை, அப்பெருமானை எடுத்து வளர்த்த யசோதைப் பிராட்டியாருடையவும் கோபியருடையவுமான பேச்சுக்களாற் கொண்டு மொழிந்து ஈடுபடும் அழகு வெளியாம். கண்ண னது. குழவிப்பருவத்தில், கஞ்சன் முதலியோரால் நேர விருந்த கொடிய ஆபத்துக்களுக்குப் பெரிதுமஞ்சிப் பல்லாண்டுபாடி மங்களாசாஸனம் பண்ணியும், அப் பெருமானது ஸௌசீல்ய ஸௌலப்யாதி குணங்களைப் பருகிக்களித்தும் இவ்வாழ்வார் மனங்கவிந்து நிற்கும் அற்புத நிலைமை இங்கு நம்மால் எழுதக்கூடிய அளவின தன்று. இங்ஙனம் சோராதகாதற் பெருஞ்சுழிப்பால் தொல்லை மாலையொன்றும், பாரா தவனைப்பல் லாண் டென்று காப்பிடும் பான்மைய” ராகிய இவரது பெருமை பற்றியே “மங்களா சாசனத்தின் மற்றுள்ள வாழ்வார்கள் தங்களார் வத்தளவு தானன்றிப்-பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர்ப் பட்டர்பிரான் பெற்றான் பெரியாழ்வா ரென்னும் பெயர் (உபதேச ரத்தினமாலை, 18)