பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெரியாழ்வார் 79 என்பன முதலாயுள்ள இப்பெரியாரது அழகிய பாசுரத் தொடர்களால், பிற சிந்தையின்றி எம்பெருமானையே உபாயோபேயமாகப் பற்றி நின்ற இவரது பரமபக்தி யின் சிறப்பு வெளியாகும். இனி, இவ்வாழ்வார் வாழ்ந்த கால நிலையை நோக்கு வோம். மேலே, ஏழாம் நூற்றாண்டு, வைதிக சமயத்தவ ரான அடியார்களுக்கும், அவைதிகர்களான சைக பௌத்தர்களுக்கும் கடுமையான வாதப்போர் நிகழ, அதனில் முன்னவர் வெற்றிபெற்றுச் சநாதன தர்மங் களை நிலை நாட்டிய காலவிசேடம் என்பது விளக்கப் பட்டது. இதற்கடுத்த எட்டாம் நூற்றாண்டிலோ, அத்தகைய போர்கள் உக்கிரமாக அத்துணை நிகழ இடமில்லை யென்றே சொல்லலாம். இந் நூற்றாண்டில் ஆதிக்கம் 'பெற்றிருந்த தமிழரசர்கள்-பல்லவரும் பாண்டியருமே ஆவர். இவர்கள் புறச்சமயங்களைத் தழுவாது, வைதிகக் கொள்கைகளில் ஆழ்ந்தபற்றுடையராயிருந்தனர் என்பது, இவர்களுடைய சாஸனங்களால் நன்கறியப் படுகின்றது. இவருள்ளே, பல்லவர் வைஷ்ணவமதத் தையும், பாண்டியர் சைவமதத்தையும் மிகுதியுந் தழுவி யவர். “மன்ன னெப்படி மன்னுயிரப்படி” என்றவாறு, அரசர்கள் எந்த மதத்தை மேற்கொண்டு பேரபிமானங் காட்டுகின்றனரோ அம்மதமே நாட்டில் ஆதிக்கம் பெற் றோங்குவதும், அவரபிமானம் பெறாதவை அத்துணை யாகச் செழியாமல் தாழ்வதும் முற்காலத்தியல்புக களாகும். ஆகவே அரசரது ஆதரவுபெறாத நிலையில், சைக பௌத்தங்கள் தம் உக்கிர நிலை தணிந்து, முந்திய நூற்றாண்டுகளில் அடைந்திருந்த இணையற்ற தலை