பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

86 ஆழ்வார்கள் காலநிலை. மாறன், இராஜசிம்மன் என்ற பெயர்கள் வழங்கின என்பது தெரியலாம். மாறன் என்ற பெயரையே, மாறவர்மன் என்றும் நெடுமாறன் என்றுங் கூறுவதுண்டு என்பது, இவன் பாட்டனும் சம்பந்தர்காலத்தவனுமாகிய 4-ம்எண்ணுக் குரிய பாண்டியனை அம்மூவகையாகவும் சாஸனமும் நூல்களும் கூறுவதினின்றும் பெறப்படும். அதனால் மாறவர்மனான இராஜசிம்மனும் நெடுமாறன் எனப் பட்டான் என்க, இவ்விராஜசிம்மன் தன் முன்னோரைப்போலவே சைவசமயத்தவனாபினும், பெரியாழ்வாரால் திருத்திப் பணிகொள்ளப்பெற்றவன் இவனே என்று கருதற்குப் பெரிதும் பொருத்தம் உள்ளது. இப்பாண்டியன்மகன் பராந்தகன்நெடுஞ்சடையன் என்பவன்-உத்தேசம் கி. பி, 767-ல் பட்டமெய்தியவன். இவ்வரசனது ஆட்சித் தொடக்கத்தே, இவனிடம் உத்தரமந்திரியாக இருந்தவன் மாறங்காரி என்ப னென்பதும், இந்நெடுஞ்சடையனது மூன்றாம் ஆட்சி வருஷத்தில் (கி. பி. 770) அம்மந்திரி இறந்துவிட்டனன் என்பதும் சாஸனங்களினின்று நன்கறியக்கிடக் கின்றன. இதனால், நெடுஞ்சடையனது ஆட்சியில் மிகச் 1. இவனை 'மான்றேர் மாறன்' என்று சாஸனங் கூறுவதில் மான் தேர் என்பது விசேடணமாகக் கொள்ளற் குரியதேயன்றி, பலரும் கருதுவது போலத் தேர்மாறன் என்று . பிரித்து அதனை இயற்பெயராகக் கொள்ளல் பொருத்தமன்று, பாண்டிக் கோவைப் பாடல்களில், மாறன் என்று இவன் பாட்டன் வழங்கப்பெற்றவாறே, பேரனும் வழங்கப்பட்டனனென்றேகொள்க.