பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெரியாழ்வார் 87 சிலவருஷங்களே அவன் உயர்பதவியை வகித்தவன் என்பது தெரியலாம். அம் மகாசாமந்தன் தன்னரசனுக்குக் கங்கராசன் மகள் பூசுந்தரியை, வடவேந்தருடன் பெரும்போர் புரிந்து மணஞ்செய்து வைத்தவனென்று வேள்விகுடிச் சாஸனம் கூறுகின்றது. இக்கங்கசம்பந்தஞ்செய்து கொண்டவன் நெடுஞ்சடையன் தந்தையான மேற் கூறிய மாறவர்மனே என்பது“கொங்கரவ நறுங்கண்ணிக் கங்கராசெனொடு சம்பந்தஞ் செய்தும்” எனவரும் அச்சாஸனத்தொடரால் தெளிவாம். இங்ஙனம் மணஞ்செய்துகொண்ட தேவிவயிற்றிற் பிறந்த மகனாகவே நெடுஞ்சடையன் கூறப்படுவதும் அறியத் தக்கது. எனவே, மகனான நெடுஞ்சடையனது ஆட்சித் தொடக்கத்தில் உத்தரமந்திரியாயிருந்த மாறங்காரி, அம்மகன் பிறப்பதற்கு முன்பே தந்தையான நெடு மாறன்கீழ்ப் பல்லாண்டுகளாக அப்பதவியை வகித்து வந்தவன் என்று கொள்ளத் தடையில்லை. இம்மாறங்காரி *ஸ்வர்க்காரோகணம் செய்தபின்னை அவனுக்கு அநுஜனாய் உத்தரமந்திரபதம் எய்தின"வன் மாறன் எயினன் என்ற பெயர் பெற்றவன். பாண்டியரது தலைமையமைச்சர்களாக விளங்கிய இச்சகோதரர் இருவரும் பரமவைஷ்ணவாகள்' என்பது, மதுரையை அடுத்த யானைமலை அடிவாரத்தில் இவர் களால் அழகாக நிருமித்துப் பிரதிஷ்டிக்கப் பெற்ற நரசிம்மப்பெருமாள் கோயிற் சாஸனங்களால் தெளிவா கின்றது. இங்ஙனம் பரம வைஷ்ணவனொருவனைத் தன் உத்தரமந்திரியாக உடையனாயிருந்திருப்பதால், பாண்டியன் மாறவர்மன் தன் சமயக் கோட்பாட்டில்