பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     வினா

     விதியின் மேலே உலா வருகின்ற
     வீர! வெளிப்படுவாய்;
     மதியைத் துலக்க; இருண்ட உலகின்
     விளக்கே வெளிப்படுவாய்!

     இனப் போராட்ட இரைச்சல் அடக்கி
     ஏற்றத் தாழ்வற்ற
     இனப்போர் இலாத மாந்தன்மைக்கே
     இசைப்பாய் மேன்மை இசை!

     உடன்பிறப் பாண்மை என்னும் வீணை
     உறவை இசைக்கட்டும்!
     உடலில் உயிராய் அன்பின் மதுவை:
     உணர்வில் ஊட்டிடுவாய்!

     உலகில் மீண்டும் அமைதிக்கான
     நாள்கள் உயரட்டும்
     க்லகப் போரில் களிப்பார்க் கெல்லாம்
     அமைதிக் களிப்பூட்டு.

     மாந்தர் இனமே நெல்வயலானால்
     மண்டும் அறுவடைநீ!
     மாந்தர் வாழ்க்கை வழிபோக்கிற்கு
     வகுக்கும் குறிக்கோள் நீ!

     அன்பு வரண்டுவிட்ட நிலையில்
     அறிவு நாகம் அவனைக் கொத்தும்,
     அன்பின் ஆட்சியின்கீழ் அறிவை
     அடக்கத் தவறி விட்டான் வீழ்ந்தான்

101