பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     அன்பும் அறிவும்

     அரியநல் அன்போ எரிமலை வாயிலில்
     சிரித்துக் கொண்டே அஞ்சாது குதித்தது.
     அறிவோ நுனிக்கொம் பேறித்
     தயக்கத் தோடதை வியந்து பார்த்தது.

     முழுமுதல் ஒருவன் பால் மூளும் அன்புடையோர்
     பலவற்றினின்றும் விடுதலை பெறுகிறார்.
     உண்மையும் அன்பும் ஒன்றுக் கொன்றுறவே.
     இயலா தென்பதை இயற்றுவ தன்பு,
     வெறியினை யுடையது அறிவு.
     அன்பு மாண்புடையது, அச்சம் இலாதது.
     விரித்தவிண் வலையில் அறிவு சிக்குறும்,
     செயல்முறையில் அது பயன்கொளல் உண்மை.

     அன்பின் படையோ ஆழ்உணர் வாகும்.
     இன்பின் உணர்வைத் தென்பொடு தேடின்
     அறிவு தந்திரமாய் அதற்குவலை விரிக்கும்.
     அறிவின் சாரம் ஐயமொடு அச்சமே;
     அன்பின் சாரம் உறுதி நம்பிக்கை.

     அறிவோ அழித்திட வளர்ந்துவக்கின்றது;
     அன்போ வளர்ந்திட அழிந்துவக்கின்றது.
     அறிவு மலிவானது,
     திரியும் காற்றுப்போல் எங்கும் கிடைப்பது.

     ஆனால் அன்போ,
     அருமையானது, பெருமதிப்புற்றது.
     அறிவு, ஏன்? எப்படி?’ என்றே, அலமரும்;

104