பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன் ஒவியத்தில் இன்னும் நிறைவிலாக் குறையொன்று ஏதோ உள்ளதே. காட்சிக் கினிய மாட்சி ஒவியம் கேட்பார் அற்றுக் கிடத்தல் ஏளுே?

உழைக்காதுண்டு களித்திருப்போனும் எத்திப் பிழைக்கும் ஒட்டுணியாளனும் மதத்தின் தலைவனும் சமயச் சழக்கனும் மாந்தர் வழியெலாம் வலைவிரித்துள்ளனர்; ஏற்றத் தாழ்வின் ஏற்பாடின்னும் முறைமாருமல் கறையாய் உள்ளதே இந்நில மாறுவதெந்நாள்?

இறைவன் :

எழுவீர், எழுவின் !

உரிமை இழந்தே உணர்ச்சியற்று உறங்கும் ஏழை எளியரைத் தட்டி எழுப்பிட எழுவீர் நீங்கள் எழுவீர்! கொடும்பணக்காரர் கோட்டைகள் அடியோடு இடித்துச் சாய்த்திட எழுவீர்!

மக்களின் நெஞ்சில் மங்கா உணர்ச்சி எக்களித்துயிரில் மிக்கெழச் செய்க! நெருப்பின் கொதிப்புக் குருதியில் விரிக!

எளிய ஊர்க்குருவி பெரிய வல்லூறி இன எதிர்த்துப் போரிடும் ஊற்றமும் ஆற்றலும் மேற்படச் செய்க. மக்களாட்சியின் மாட்சி மிக்க நாள்

1 : 5