பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைக்குள் வந்திடக் கடுகி வருகின்றது. பழமைத் தடைகளே அழித்தொழியுங்கள் உழவர்க் குதவாக் கழனி எங்கிருப்பினும் உழைப்பவர்க் கெட்டாத் தழைமணிக் கதிர்கள், வயிறெரிவதுபோல் வயல் எரியட்டும். பற்றும் நேருப்பால் முற்றுகை இடட்டும்! கோயிலில் எரியும் கோல விளக்குகள் மாளிகை மாடத்து மணிவிளக் களை அணேத்து விடுவதை ஆதரிக்கின்றேன்; எல்லார்க்கும் எல்லாம் என்றிருக்கட்டும். இல்லை என்றசொல் இல்லா தொழிக; பளிங்குக் கற்களால் பாங்குறத் திகழும் தொழுகை, இடங்களே வெறுக்கின்றேன்தான்.

என் இன வணங்க மண்ணினுல் ஆன குடிசைகள் எழட்டும். உழைப்பவர்க் குலகம் உரிமை ஆகட்டும்.

இதுநாள் தோன்றும் புதுநாகரிகம் கண்ணுடித் தொழிற்சாலையே, கீழை தாட்டுப் பாவலனுக்கு வெறியை ஊட்டுக, நொறுக்கி எறிவானே.