பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பிாிவினைக்கு முன்பு இருந்த இந்தியாவுக்குப் பெருமை
சோ்த்த உலக மகா கவிகள் மூவர் - தாகூர், இக்பால்,
பாரதி.

அவா்களில் கவி இக்பால் பேரறிஞர், விஞ்ஞானி, சட்ட
நிபுணா், ஐன்ஸ்டீன் கண்ட 'தொடா்பு நிலைத் தத்துவம்’
பற்றிச் சிறந்த அறிவு பெற்றிருந்தாா்; பன்மொழிப் புலமை
மிக்கவா்.

"அன்பா் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்து எய்தும் பராபரமே” என்ற தாயுமானவாின் குரலை எதிரொலித்த இக்பால் குழந்தையின் பிராா்த்தனை என்ற ஒரு பாடலில் பின்வருமாறு பாடுகிறாா். “என் உள்ளத்தில் உதித்த ஆசையெல்லாம் வேண்டுகோளாக உருவெடுத்து உதட்டில் வருகிறது. இறைவா, என்
வாழ்க்கையை ஒரு தீபத்தைப்போல் அமைத்துவிடு. என் வாழ்க்கையின் மூலமாய் உலகிலிருந்து இருளை அகற்றிவிடு. என் பிரகாசத்தால் ஒவ்வோாிடத்திலும் ஒளி உண்டாக்கி விடு. மலர்களால் பூந்தோட்டத்துக்கு எழில் உண்டாவதைப்போல்
என் உயிரால் என் நாட்டுக்கு உயா்வு உண்டாக்கிவிடு.
இறைவா, என் வாழ்க்கை ஒரு விட்டிலைப் போல் ஆகட்டும். அறிவு என்னும் விளக்கை நான் நேசிக்கட்டும். என் பணியெல்லாம் ஏழைகளுக்குத் துணை செய்வதாகவே இருக்
கட்டும். துன்புற்றோரையும் வயோதிகரையும் நான்
நேசிக்கட்டும். என் அல்லாவே, என்னைத் தீமையிலிருந்து காப்பாற்றுவாயாக. நோிய வழியில் என்னை நடத்துவாயாக!” “தொழிலாளிக்கு உற்ற நண்பன், முதலாளிக்குச் சாவு
மணி’ என்று குா் ஆனை அவா் வருணித்தார்.

"இக்பாலின் கவிதைகள் அதிகாலையிலே ஒட்டகப்
பிரயாணிகளை எழுப்பும் மணியோசை ஆகட்டும். எமது
மக்களின் பிரயாணக் கூட்டம் மறுபடியும் விழித்து முன்னேறிச் செல்லட்டும்" என்று பாடிய இக்பால், சீனமும்
அரேபியாவும் எங்கள் நாடே, இந்துத்தானமும் எங்கள்

10