பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயலற்றிருப்பதே வாழ்க்கையின் கமுக்கம்;

இயம்பிய தொருகுரல் மலையிலிருந்தே.

எறும்பொன்று எதிர்குரலாகச் -

சுறுசுறுப்பே பெரும் இன்பம் என்றதுவே.

நெஞ்சம் கவர்ந்திடும் நல்மணத்தை-விழி நிறைந்து களிப்புறும் நல்நிறத்தை

அஞ்சொற் கடங்கா மறைபொருளே-நீ

ஆக்கி வெளித்தந்த தெப்படியோ? விஞ்சும் மணத்தில் நிறத்தினிலே - நான்

வியப்பில் சிறைப்பட்டு அடங்கியுளேன் .

○ Q ల

என்றும் மக்கள் உடன் பிறப்பென்னும் :யாழிசை மீட்டிடுவாய்,

அன்பாம் மதுவை மீண்டும் மீண்டும் அருந்திக் களித்திடுவாய் !

Ф Ӧ を 3

தன்னழகைக் கண்ணுடி தன்னில் தனித் துவந்து பொன்னழகி பார்ப்பதுபோல் பூக்கும். மலர்கள் வான்