பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     நாடே,..உலகெல்லாம் எங்கள் நாடே” என்று சா்வதேசிய
     கீதம் இசைத்தார்.

     "உலகின் பெரும்விதியை நிா்ணயிக்கும் நட்சத்திரம்" ஆக
     மனிதன் திகழ வேண்டுமென்று இக்பால் விரும்பினாா்.
     மனிதன், இறைவனின் பிரதிநிதியாக உலகில் ஒளிவிட
     வேண்டுமென்று அவா் விரும்பினாா். அத்தகைய மனிதன்
     பூவின் அரும்பினுள் இருக்கும் மணத்தைப் போலச் சிறைப்
     பட்டிருப்பதை அவா் விரும்பவில்லை. “பூஞ்சோலையின்
     தென்றலுடன் கலந்து உலகெங்கும் உனது நல்மணம் கமழும்
     படிச் செய்து விடு. இழிவான சிறு அணுவாக இருக்கிறாயே,
     பெரும் பாலைவனமாக மாறிவிடு. இலேசான இளங்காற்றின்
     அலையாக இருக்கின்றாயே. சக்தி வாய்ந்த பெரும் புயலாகப்
     பெருகிவிடு. உன் அன்பின் வன்மையினாலே அற்பப் பொருளை
     யெல்லாம் உயா்ந்ததாகவும் புகழுடையதாகவும் செய்துவிடு”
     என்று இக்பால் பாடினாா்.

     குறுகிய தேசிய வெறியை அவா் என்றும் போற்றவில்லை.
     "நாட்டுப் பித்து எனும் தூசியால் அழுக்குப் படா
     திருக்கும் தூய ஆடையுடுத்திய மனிதனையே இறைவன்
     போற்றுகிறாா். குடியேறிச் சென்ற நாடாகிய எகிப்தையும்
     பிறந்த நாடாகிய கன்ஆன் நாட்டைப் போலவே ஏற்றுக்
     கொண்ட யூசப் நபியைப் போன்றவனையே இறைவன்
     வாழ்த்துகிறாா்” என்று இக்பால் பாடினாா்.

     முதலாளித்துவ அமைப்பு, நாளும் உழைக்கும் வா்க்கத்தை
     நசுக்கிப் பிழிந்த கொடுமையைக் கண்டு உருகிய இக்பால்
     மனிதனை, சாதாரண மனிதனை, மகத்தான சக்திகளைத்
     தன்னுள்ளே கொண்டிருக்கும் மனிதனைத் தட்டிக் கொடுத்து
     ஆறுதல் அளித்து நம்பிக்கை ஊட்டினாா்.

     "இந்த உலகு எனும் மலா்ப் பூங்காவின் நாசநிலையைக் கண்டு
     நீ கவலைப்படாதே! விரைவில் இதன் கிளைகளிலிருந்து நட்சத்
     திரங்களைப் போன்ற பூங்கொத்துக்கள் பிரகாசிக்கும் காலம்
     வரப்போகிறது. பூந்தோட்டத்திலிருந்து குப்பை கூளங்கள்

11