பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறங்கும் குழந்தையின் ஒண்கை யிருந்து தழுவி விழுந்திடும் பொம்மைகளைப்போல்

வண்ண மலர்கள் மண்ணில் உதிர்கின்றன.

காதற் காட்சி இன்பம் பிறர்க்குக் காட்டல் அரிதே; ஊது இலத்தீப் பொறிபோல் ஒளிர்ந்து கணத்துள் மறையும்.

{} {} {}

நெஞ்சம் உடலை விட்டால் நெஞ்சம் திலேயா(து) அழிவை எய்தும் நெஞ்சம் மண்ணும் உடலில் நெகிழ்ந்தே சிறைப்பட் டாலும் மண்ணும் விண்ணும் எல்லாம் மாந்த னுடைய நெஞ்ச எண்ண ஆளுகைக் கீழ் இயங்கிக் கட்டுண் டாடும்.

உள்ளத்தால் பொய்யா துலகுக் குடையவர் தள்ளத் தகாவகையில் தாமே தலைவாழ்க்கை வெள்ளத்தால் வந்தேறுவர்

{} 翁 {}