பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுகின்ரு அவர். எனினும் கீழ்த்திசை எழுச்சி பெறும் காலம் வந்துவிட்டதை உணர்ந்து, கீழ்த்திசையின் மடியில் புதிய கதிரவன் உதித்து விட்டான்' என்று போர்ப்பரணியும் பாடுகின்ருர்.

இக்பால் சமயப் பற்று மிக்கவர்; ஒரே இறைவன் என்னும் ஏகத்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர் : தாய்மையில் உள்ளத்தைப் பறிகொடுத்தவர் ; சிறப்பாக, மானுடம் பேணும் :ாண்புடையவர்.

"மனிதப் பண்பு எது? மனிதனே மதிப்பதே ; இனியேனும்

மனிதனின் மதிப்பைப் போற்று”

என்று மானுடம் பாடிய வானம்பாடி கவிஞர் இக்பால். இதளுல்தான் என் இதயக் குருதி என் கவிதைகளில் நிரம்பி வழிகிறது என்று அவர். பாடியுள்ளார்.

சமரசத் தென்றலில் திளைத்த கவிமலர் இக்பால். இந்து மதத் திடம் மதிப்பு வைத்திருந்தவர் அவர். அவர் என்றும் வெறுப்பை விதைத்ததில்லை.

"நான் கோயிலை மதிக்கிறேன் ; கஃபாவின் முன் பணிகிறேன் ; பூனூல் உண்டு என் மார்பில் : கையிலோ ஜெபமாலை'

என்று அவர் கவிதை ஒன்று பேசுவது, அவர் கொண்டிருந்த சமரசப் போக்கிற்கு எடுத்துக் காட்டாக இன்னும் விளங்குவதைப் பார்க்கலாம். "மதம் ஒருவர்க்கு

  1. 38