பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 நுட்பமாகப் புரிந்து கொண்டார். தன் நெஞ்சத்துக்கு உடன்பாடான புதிய சமுதாயக் கருத்துகள் அங்கு உருவம் பெற்று வருவதை அவர் கண்டார். அந்த மகத்தான சமுதாய எழுச்சியை முசுலிம் உலகுக்கு உணர்த்த அவர் விரும்பினார். அந்த நிலையில்தான் 'இலெனின், தேவ கன்னிகளின் பாட்டு, இறைவனின் கட்டளை' என்ற முப்பெரும் பாடல் (Trilogy) உருவாயிற்று. இதில் இக்பாலின், கலை, உலகு தழுவிய அம்சங்களைப் பெறுகிறது.

இலெனின் வாழ்ந்த நாளில் கடவுளை நம்பியறியாதவர்; அவர் ஒரு நாத்திகர். அவர் சோவியத் வாழ்வின் மூலவர். மனித வர்க்கத்தின் கணிசமான ஒரு பகுதி மக்கள் சிறந்த நல்வாழ்வு பெற புதிய சமுதாயத்தைக் கண்டவர். இலெனின் படைத்த வாழ்க்கை அமைப்பில் அடிமை இல்லை, ஆண்டான் இல்லை, சுரண்டல் இல்லை, கொடுமை சூது இல்லை. எல்லோருக்கும் சமஉரிமை, சமவாய்ப்பு அளிக்கப்படுகிறது. மகாகவி இக்பால் இந்த வாழ்வை நேரிலும் காண்கிறார்; உணர்ச்சிப் பெருக்கடைகிறார். இசுலாமிய உலகம், இந்த நல்வாழ்வை ஒப்பி வாழ வேண்டுமென்று விரும்புகிறார். எனவே நாத்திகரான இலெனின் முன் திடீரென்று ஆண்டவனை எதிர்ப்பட வைக்கிறார். இலெனினைப் பல கேள்விகள் எழுப்ப வைக்கிறார். ஆண்டவன் வாய்மொழியாக ஆண்டவன் பதிலாகப் புதிய சமுதாயக் கருத்துகளை இசுலாமிய உலகுக்கு எட்டச் செய்கிறார்.

இக் கவிதையின் நடை யழகு மரபுவழி வெளியீட்டு முறை (classic)க்கு ஒத்தது. எடுத்தாண்ட பொருள் அதீதக் கற்பனை (Romantic) வகைப்பட்டது. இலெனின் பேச்சு துருவி ஆராய்ந்து எதையோ தெரிந்து கொள்ளத் துடிக்கும் நிலையை வெளிப்படுத்துகின்றது. அவருடைய பாத்திரப் படைப்பு அதீதக் கற்பனையே, தேவ கன்னிகளின் கூட்டிசை ஓசை நயமும் எதுகை மோனைச் சிறப்பும் பெற்றிருக்கின்றன. உயிரின் ஆழத்திலிருந்து பிறக்கும் நாதவடிவின் பெருமைகளை அந்த இசையில் காண்கிறோம். இறைவனின் கட்டளை,

                             17