பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மிகுந்த உணர்ச்சிக் கட்டுப்பாட்டுடன், ஆழ்ந்த குரலில் வெளிப்படுகிறது. அதில் பரம்பொருளின் காம்பீர்யத்தையும், பெருமிதத்தையும் இக்பால் கொண்டு நிறுத்துகிறார் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

லெனின் கேள்வி:

முதலில் இறைவனிடம் இலெனின் பின்வருமாறு கூறுகிறார்:

"வாழ்விலும் இயற்கையிலும் உனது குறியீடுகள் ஒருமையை உணர்த்துவன: ஆதியும் அந்தமும் இல்லாதவன் நீ என்கிறார் உனை; என்றும் வாழ்கிறாய் என்கிறார் உனை; ஆயின் நீ நிலைப்பெற்றிருப்பதை யான் அறிவதெங்கனம்? மேதையர் தம் கருத்துகள் நாளும் மாறுகின்றனவே. இன்று நான் கண்ணெதிரே காண்கிறேன். உனை இப்போதும் திருச்சபையின் கட்டளைக் கருத்தே என் கவனத்துக்கு வருகிறது...

"உன் அனுமதியுடன் ஒரு வினாவினை எழுப்ப விரும்புவேன் யான், ஆண்டவனே இவ் வினாவுக்கு வேதாந்தியின் பெரு நூல் ஏதும் விடை தரவில்லை! நீ யாருக்கு இறைவன்? வசனங்களினடியில் வதியும், களிமண்ணால் ஆன மனிதனுக்கு இறைவனா நீ? யாருக்கு இறைமை உணர்த்தி நிற்கின்றாய் நீ?...

“கீழைய நாடுகளுக்கு கடவுளார் ஐரோப்பிய வெள்ளையர்; மேலைநாடுகளுக்கோவெனில் ஒளிவிடும் டாலர்களே இறைவராம்! இந்த ஞானம். இந்த அறிவு. இந்த ஆட்சித்திறம். இந்த ராஜாங்க அமைப்புத்திறம் அனைத்தும் கொண்டு அவர்கள் குடிப்பதோ ரத்தம். ஆயின் அவர் தம் சமத்துவப் பேச்சில் குறைச்சல் இல்லை! முகங்களில் மாலைப்போதில் காணும் செந்நிறத்திரட்சி வண்ணப் பூச்சுகளின் விளைவு; அல்ல்து மது ஊறித் ததும்பும் நிலையின் காட்சி......

"இருக்கட்டும் நீ இறைவன், சர்வ வல்லமை நிறைந்தவன் நீ; நீதியின் தேவன் நீ; ஆயின் உனது உலகில்

                             18