பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



       நான் யார் ?
       தெய்வவெறி கொண்டஇப் பாவலன் தோழரே, 
       கிழக்கையோ மேற்கையோ 
       சேர்ந்திட்ட ஒருவன் அல்லேன்;
       மெய்என்று உணர்ந்ததை வையத்திற் குரைக்கிறேன் 
       மேன்மையாய்ப் புகழும்எந் 
       நாட்டையும் சேர்ந்தேனலேன்;
       பொய்வந்த மதவாணர் புரட்டினில் சிக்கிலேன்; 
       புதுநா ரிகத்தினுள் 
       புகுந்துநுனிக் கொம்பேறிலேன்; 
       கைவந்த நண்பரும் காணாத பகைவரும் 
       காதலித் துவப்பதில்லை,
       கருத்தொன்று படுவதிலைஏன்? 
       நெய்வந்த தேனையும், நேர்எதிர் நஞ்சையும் 
       நிறையையும் குறையையும் 
       பகுத்தறிந்து உணர்பவன் நான்!
       மெய்யினை அறிபவன் உண்மையை உணர்பவன் 
       மேவு குப்பைமேட்டினை 
       மேரு எனக்கொள்கிலேனே.

                             22