பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



          தனிமை
          என்றன் நெஞ்சு 
          கடந்த மாலையைக் கருதுகின்றது;
          என்றன் கண்கள் 
          வருநாள் விடியலை வழிபார்த்துள்ளன; 
          மக்களிடையில் நான் தனித்து வாழ்வேன். 
          வீட்டில் சுடரா விளக்கு 
          தனிமையில் எரிந்தே இனிமை பெற்றிடுமா? 
          என்னை விரும்பிட வீட்டில் 
          எவருமே இல்லையா? 
          கழனியில் எழுந்த செங்கழுநீர் மலர்நான், 
          தனிமை யானவன், 
          ஆண்டவ, அருளினை அருளுக, பரிவுகொள், 
          பண்புடை நண்பினை அன்புடன் தருகவே.


இ-2