பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



  அடிமைதான் கூறிய ஒன்றையே திரும்பவும் 
  ஆய்ந்திடா துவந்துரைப்பான், 
  பொடியளவு கூட அவன் தன்னறிவு பெற்றிலான் 
  பூக்காது புதுக்கருத்தே.
  உரிமையன் சுறுசுறுப் பானவன் அவன்மனம் 
  உயர்எண்ண யாழ் இசைக்கும் 
  அரியவன் செயற்கரிய செயல்களை ஆற்றுவான் 
  அலைபாயும் நெஞ்சம் இலான்.
  அடிமைக்குக் காலம் ஒரு தளையாகும், அவனின்வாய் 
  விதியதன் அடியே தொழும்; 
  உரிமையன் திண்ணியன், விதிக்கும் அறிவீபவன் 
  உழைப்பினால் உலகாள்வனே!



                           29