இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஒருவர்க் கொருவர் பகைகொளும் வண்ணம்
உண்மை மதம்சொல்ல வில்லையே திண்ணம்!
ஒருமைக்கு உதவுதல் உள்ளன்புப் பாட்டே
ஒற்றுமைப் பண்பேதம் ஒத்திசைக் கூட்டே!
அருமைசோ் இந்தியா ஈன்றநம் நாடே
அவளின் புகழ்காத்தல் நம்கடப் பாடே!
பெருமைசேர் அன்புக் குரியவள் அன்னை
பேசிடும் உண்மைக் குயிருடல் அன்னை!
கிரேக்கம், எகிப்து, உரோமையில் ஆட்சி
கிளரினும் பின்பவை கொண்டன வீழ்ச்சி.
ஒரேஉயர் பண்டைப் பெருமைகொள் பீடு
உயர்ந்து சிறந்தது நம்அரும் நாடு!
காலச் சுழற்சியில் பற்பல, நூற்றாண்டு
காலினை நீட்டினர் வந்தேறிகள் ஈண்டு.
சாலப்பகையை வளர்த்தனர் ஓய்ந்தார்
தலைநிமிர்ந் தோங்கிய பாங்கினால் மாய்ந்தாா்.
29