பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



    மாந்தன் விருப்பம்
    மாந்தற்குள்ள பெருமையெல்லாம் 
    புதுமை படைக்கும் மனத்தாலாம்! 
    மாந்தன் கைகளின் இவ்வாற்றல் 
    மண்ணை உயர்த்தும் பேராற்றல்!
    வெண்ணிலாவும் விண்மீனும் 
    விளைந்த நல்லுயிர் ஒவ்வொன்றும் 
    விண்ணில் மண்ணில் என்றென்றும் 
    விளைந்த நாள் போல் சுழல்கிறதே.
    --------
    இறைவன் ஆணை இடுகின்றான்: 
    "இதுஇப் படியே இருக்கட்டும், 
    முறைவே றெதையும் சொல்லாதே 
    முனைந்தே எதையும் செய்யாதே." 
    மனிதன் சொன்னான்: "ஆமாம் அது 
    மண்ணில் இப்படித்தானானால் 
    இனிஇப் படித்தான் இருந்திடுதல் 
    வேண்டும் எண்ணம் எனக்குரித்தே.



                     33