இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இளம்பிறையே
காணும் இளம்பிறையே - விழிக்
காதல் குடியிருப்பே!
தோணும் நின் பாதையிலே - பல
ஆயிரம் ஆயிரமாய்ப்
பூணும் விழி வலைகள் - நின்
போக்கினில் சார்ந்தனவே.
நாணுதல் விட்டொழிவாய் - இன்றுன்
நலிந்த தோற்றம் எண்ணி
மாணும் முழுநிலவு - உன்னில்
மண்டி உளதறிவாய்!
34