பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



    சமுகம்
    தனிமனிதன் சமுகத்தால் 
    சிறப்பெய்துகின்றான்;
    சமுதாயம் தனிமனிதர் 
    மூலம் சிறப்பெய்தும்.
    தனிமனிதன் சமுகத்துள் 
    தனை ஆழ்த்தும் போது 
    சிறுதுளிநீர் பெருங்கடலாய்த் 
    தன்னுருவில் மாறும்.
    தனிமனித எண்ணத்தை 
    வெளிப்படுத்த வேண்டித் 
    தூண்டுவதும் சமுதாய 
    உந்தாற்றலாகும். 
    இனிதிலவன் ஒழுங்குறவும் 
    பண்படவும் செய்யும், 
    ஏற்றமுறச் செய்யும் உயர் 
    நோக்கை விாிவாக்கும்.
    சமுதாயம் எனும் கோவை 
    வடத்தினிலே மணியாய்ச் 
    சாா்ந்திடுநீ அஃதின்றேல் 
    புழுதி எனப் போவாய்!





                  36