இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமுதாயத் துயர்வெல்லாம்
ஒற்றுமையால் உண்டு!
தழைத்தோங்கும் அன்பிலையேல்
இல்லைஉயிா் வாழ்க்கை!
சமுதாய இன்னொளியை
ஒற்றுமையாம் நெருப்பே
சமைத்தளிக்கும் ஞாயிறின்றேல்
ஒளியுண்டோ கூறீா்?
சமுதாயம் ஓர் இனமாய்
ஒன்றுபட்ட கருத்தில்
ஒரேகொள்கை ஓருணர்ச்சி
சாா்ந்திடுதல் வேண்டும்.
37