இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காலம் அனைத்தும் மக்கள்தம் கருத்தில் அகலா திருப்பவர்கள் ஞாலத் துள்ளே இருவர்தாம்- ஒருவர் வள்ளல்; மற்றொருவா் சாலச் சிறக்கும் பாவாணர்; தகைசேர் இருவர் ஒன்றாகி மேலச் சிறந்த சங்கு அப்துல் காதர் மெய்யன் பாகினரே!
தோளாண்மை யாலே தொழிலில் சளைக்காமல் தாளாண்மை தந்த தகுபொருளைச்செந்தமிழுக்கு வேளாண்மை செய்யும் விருப்பினர்க்கு வையகம் நாளாண்மை செய்யும் நயந்து.
த. கோவேந்தன்