பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



    மேலை நாகரிகம்
    மேலை நாட்டில் வாழ்விரே, இறை
    மேலோன் படைத்த இவ்வுலகைக் 
    காலை மாலைச் சந்தைக் கடையாய்க் 
    கருத்தில் கொண்டு மயங்காதீா்.
    விலைபொிதாக எண்ணும் பொன்னும் 
    வீழும் நாளை மதிப்பற்றே.
    நிலையா மைஎனும் நிழலைக்கருதி 
    நிற்பதுவும் ஒரு வாழ்வாமோ?
    மெல்லிய கொம்பில் கட்டிய கூடு 
    விரைந்து நொறுங்கி அழிவதுபோல் 
    வெல்லும் உங்கள் நாகாிகவாள்
    தானே அழிந்து நொறுங்கிடுமே!




                            39