இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இழிவு
வேற்றவர் கல்வியைக் கற்கிறீா், பொருந்தா
விருந்துண் டுடலுயிர் நைகிறீா்,
மாற்றவர் சுண்ணம் முகத்தினில்-பூசி
மாயப்பொய் வண்ணம் உவக்கிறீா்.
நேற்று அவர் கைக்கொள் முறையினில்-பெறும்
ஊதியம் நூறாய் அடுக்குறீா்.
ஆற்றல் மிகும் உங்கள் உள்ளங்கள்-பிறர்
கருத்தின் அடிமைகள் ஆயின!
ஊற்றடைத் தேகடன் வாங்கிய - பிறர்
கற்பனை ஆசையே உங்களின்
தோற்றம் செயலினில் நிறைந்துள - உங்கள்
தூய வடிவினைக் காண்கிலேன்.
ஊற்ற மிகும்உகிா் வல்லூறு - கல்வி
ஒருசிறு வாத்திடம் கொள்வதா?
ஏற்ற மிகும்ஒளி ஞாயிறு - விண்
மீன்களினால் எழில் ஏற்பதா?