இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பூங்காவின் அழகு கெட்டால்
புகுந்தின்பம் காண்பவர்யார்?
நீங்கள்இஃ தறியின் மக்கள்
விடுதலைக் கமுக்கம் காண்பீர்!
தாங்கிடும் அன்பே வாழ்க்கை.
தமக்குளே பிரித்துப் பார்க்கும்
தீங்கொன்றே அடிமைத் தன்மை
சேர்ப்பதும் அறிவீர் உண்மை.
நாடெனும் எழில்பூங் காவைக்
காப்பவர் நாமே, நம்மைக்
கேடெனும் பிளவுப் பேய்க்கால்
கேண்மையாம் பயிர்கள் தம்மை
ஆடெனப் பாழாய்க் கிற்றே,
ஆயின்என்? மறுமலர்ச்சி
ஊடெழும் அன்பின் ஊற்றால்
ஒற்றுமை மனக்கும் பூக்கும்.
42