பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



    மகனுக்கு
    வந்தேறிகளின் கடையில் 
    இருக்கும் ஆடிக் 
    குவளைகளை வாங்கிடநீ 
    அலைந்திடாதே.
    இந்தியத்தாய் மண்ணிருந்து 
    நீ விரும்பும் 
    எழில்மிகுந்த குவளைகளைப் 
    படைத்துக் கொள்வாய்.
 
    முந்து பணக்காரர்களின் 
    வழி எனக்கு 
    முற்றிலுமே முரணாகும் 
    நான் ஒர் ஏழை.
    மைந்தனே, தன்மானம் 
    தனைவிடாதே, 
    வறுமையிலும் நின்தேவைக் 
    குழைத்துண்பாயே.
 




              44