இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நிலமுடையீர்
ஊரை வளைத்துச்
சுரண்டிப் பிழைக்கும்
நிலத்தை உடையவரே!
சீரைத் தரும் நம்
இறைவன் உலகை
வாழ்வு சிறப்புறவே
யார்க்கும் ஈந்தான்
அன்புப் பரிசாய்;
என்றன் மொழிகேளீர்:
ஆர்க்கும் பசிக்குப்
பிடிசோ றுண்பீர்
அதற்கும் மேலாகப்
புதைக்கும் குழிக்குள்
வேண்டும் போது
போனால் போதாதோ?
அதையும் உங்கள்
உடைமைப் பிடிக்குள்
அடக்கப் பாராதீர்.