பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



            
              ஹாஜி சங்கு செய்யது அப்துல்காதர்

                                    வாழ்த்துரை

உலக வரலாற்றின் அடி நாள் தொட்டு வளா்ந்து வரும் சிறந்த மொழிகளில் உயா் மொழியாகவும், தனி மொழியாகவும், செம் மொழியாகவும் இன்று வரை நிலை பெற்ற வகையில் உள்ள மொழி நம் அன்னைத் தமிழ் மொழியாகும்.

தனித்தியங்கும் உயிா்ப்பும், உலகில் உள்ள எந்த மொழிக் கருத்தையும் தமிழில் வெளியிடும் அளப்பாிய தனி ஆற்றலும் கொண்டது நம் மொழி.

பைபிலுக்கு அடுத்து திருக்குறள் தான் உலக மொழிகள் பல வற்றில் மொழி பெயா்க்கப் பட்டுள்ளது. இது நமது உயா்
தனிச் செம்மொழியாகிய தமிழுக்குக் கிடைத்த சிறப்பாகும்.
"பிற மொழிகளில் உள்ள கவிதை, காப்பியங்களை மூலத்தின் சுவை குன்றாமல், தனித் தமிழினால் சொல்ல முடியுமா?” என்ற கேள்விக்கே இடமில்லாத வகையில் இன்று பிற மொழியில்
உள்ள கருத்துகள் அனைத்தும் தமிழ் மொழியில் வளம் பெற்று வருவதை வரலாறு கூறும்.

இத்தகைய முயற்சிகளே தமிழுக்குச் சிறந்த மணிமுடியாக, விளங்கி உலக வரலாற்றில் தமிழை கலையரசியாக மிளிரச் செய்யும். தமிழுக்கு மணிமுடி வைத்ததைப் போல் இருக்கும் இந்தமுயற்சியின் ஒருவைரமாக பொ்சியன், உருது, மொழிகளில் உள்ள மகாகவி இக்பாலின் பாடல்களைத் தமிழில் மொழி பெயா்த்து, இக்பால் நூற்றாண்டு விழாவின் நினைவாக வெளியிட வேண்டும் என்று நண்பர் த.கோவேந்தன், பெருங்கவிக்கோ
வர.மு.சேதுராமன் வாயிலாக முயன்றபோது த.கோவேந்தன் ஆற்றும் பணிக்கு ஒரு சிறு உதவி அளிக்கும் பேற்றைப்