பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



     முறையீடு

     என்றோ எதையோ இழந்தவன்போல்
     ஏன்நான் இருக்க வேண்டுமடா?
     எனக்குக் கிடைக்கும் நன்மையினை
     ஏன் நான் துறக்க வேண்டுமடா?
     என்றோ நிகழ்ந்த துயர்எண்ணி
     வருங்காலத்தின் நன்மைகளை
     இன்று பெறாமல் கவலையினால்
     ஏன் நான் அழுகை கொளல்வேண்டும்?
     குன்றா அமுதக் குரலிசையால்
     கூவும் குயிலின் துயர்க்கதையைக்
     கேட்ட பின்னும் குமுறாமல்
     குமையாதிருக்க நான்என்ன
     பொன்றா மலரா? சொல்தோழா!
     பொங்கும் என்றன் பாட்டூற்றுப்
     புகழ்கொள் இறைவன் முன்னிலையில்
     பூரித் துவந்து மகிழ்கிறது.
     வென்றோன் அல்லா மீதுகுறை
     விளம்பும் மீறும் செயல்ஒன்றில்
     விரைகு தென்றன் பாட்டுணர்வு
     விதியிஃதாகி விட்டதுவே.

     அரும்பூஞ் சோலைக் கமுக்கத்தை
     அழுகுப் பூவின் நறுமணமே
     ஆராக் காதல் தென்றலுடன்
     அடித்துக் கொண்டு சென்றதுவே,
     அரும்பூஞ் சோலைத் தேன்மலரே,
     ஐந்தாம் படையாய் மாறியதே,
     அவலம் இதனின் வேறுண்டோ?
     அழகே பகையாய் மாறிடுமோ?

53