பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

     ஓடிக்கொண்டிரு

     எல்லையிலா ஆர்வமெனும்
     பெரும் பரப்பில்
     ஓர் உயிர் நீ, எப்போதும்
     தொடரும் தொல்லை.

     தொல்லைகண்டு துவளாதே,
     காதல் நங்கை
     துணைகண்டும் ஆறுதலைக்
     கொண்டிடாதே.

     மல்லிகையின் பெருக்கென்னும்
     மணி ஓடைநீ,
     மாபெரிய கடற்பண்பே
     உனக்குள் உண்டு.

     நில்லாமல் ஓடிக்கொண்
     டிருக்கவேண்டும்.
     நிறையுழைப்பை எப்போதும்
     நிறுத்திடாதே.

     வல்லவனே, இடையினிலே
     எதனைக் கண்டும்
     கரையென்று கருதாதே
     வலிந்துழைப்பாய்!

62