பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     உண்மைகேள்

     குற்றம் என்றுநீ கொள்ளவில்லையேல்
     கூறும் உண்மைகேள் பாா்ப்பன!
     பற்று கோயிலின் சிற்பம் யாவுமே
     பழமையாகவே போயின.
     சுற்றத்தாா்களே தூற்றிடும்வழி
     கோயில் சூழலை ஆக்கினை.

     பள்ளி வாயிலில் தெய்வப் போாினால்
     பகைமை மூட்டியே போதகன்
     கொள்ளும் சோா்வினால் இரண்டுகோயிலைக்
     குறுகும் உள்ளமே கொண்டிலேன்.
     விள்ளும் நல்லுரை அறிவுக் கதைகளை
     வெறுத்த கன்றுபின் வாங்கினேன்.

     எனக்கென் தாயகத் துகள்கள் யாவுமே
     இறைவன் வடிவமாய்த் தோன்றுமே;
     மனம் துணிந்துவா, வேற்றுமைத்திரை
     வானில் ஏறிடத் தூக்குவோம்.
     இனம் மதம் என நமை விலக்கிடும்
     இரண்டு பட்டதைத் தள்ளுவோம்.

     அன்பும் அமைதியும் நல்ல பத்தனின்
     ஆழ்ந்த நெஞ்சில்வாழ் பாட்டடா,
     தென் புடன் சொல்லும் வணக்கம் உண்மையின்
     தெளிவுணா்த்திடும் அன்படா!

66