பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

                             முன்னீடு

ஆர்வம் நிறைந்த அன்புணர்வால் ஆளை விழுங்கித் திக்கு, முக்காடச் செய்யும் மொழியின் விழிகளே அருமைப் பாடல்கள்.

உண்மையின் உள்ளத்துணர்வுகள் இயற்கையோடும் மாந்த உலகோடும் ஒன்றித் திளைத்த பட்டறிவின் தெளிவே இந் நூல். ஒவ்வொரு பாட்டும், அடியும் உள்ளொளியின் கீற்றாகும். மண், விண், காற்று, நீர், வெளியின் ஊடெலாம் ஓடியாடிய மனத்தின் குணம், குறிகளே இப் பாடல்கள்.

கடந்த காலத்தைக் கடந்து, நிகழ் காலத்தை நினைந்து, எதிர் காலத்தின் வழிப்போக்கில் விழி செலுத்தும் முன்காணியின் நிலையே நூல் எங்கும்காண முடிகிறது. இக்பாலின் காட்சியுணர்விலும், கருத்துணர்ச்சியிலும், மொழி எழுச்சியிலும் அன்பின் வண்ணங்கள் கூத்தாடுகின்றன. உண்மையின் பண்ணொலிகள் நாடி நரம்புகளில் தாளமிடுகின்றன.

மாந்தன் வாழ்க்கை, ஒழுங்கு, தனிமை, அமைதி, இயற்கை, கலை ஆகியவற்றைப் பாடும் பாடல்களின் புத்தெண்ணம் அனைத்தும் புண்பட்ட மாந்த இனத்தாரைப் பண்பட்ட நிலைக்கு அழைத்துச் செல்கின்றன.

நாம் ஒர் அழிவின் எல்லையில் வாழ்கிறோம். அதனை உணர்த்தி விழிப்புறச் செய்து இருள் ஒளியாக வேண்டும்; குருதிவெறி அன்பாக வேண்டும்; துன்பம், இன்பமாக வேண்டும்; பகைமை தோழமையாக வேண்டும்; உலக அமைதி, உண்மை அன்பு ஆகிய இரு சிறகுகளுடன் பறந்துயர்ந்து இசைக்க வேண்டும் என்று ஊக்குவனவே இக்பாலின் பாடல்கள்.

எல்லாம் நம் முள்ளேயே உள்ளன. காலம், காலம் கடந்தது. துறக்கம், நிரயம், பிறப்பு, இறப்பு, இன்பம், துன்பம் அனைத்தையும் நாமே படைக்கிறோம். விழிப்பு நிலையிருந்தால்